நிலத்துக்குத் திரும்புவது என்றால் என்ன?
நகரவாசிகள் பலருக்கும் இயந்திரமயமாகிவிட்ட தங்களது வாழ்க்கை அலுத்துக் கொண்டு வருகிறது. இயற்கையிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும் தங்களது உறவை மீட்டுக்கொண்டு புதிய அர்த்தமுள்ள வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் முயற்சியில் இவர்களில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். முழுநேர விவசாயியாகவோ, பகுதிநேர விவசாயியாகவோ, தோட்டம் போடுபவராகவோ, மரம் நடுபவராகவோ, பண்ணைகளில் தன்னார்வலராகவோ பலவிதமான மனிதர்கள் உள்ளனர். சிலர் தனி நபர்களாகவோ, குடும்பமாகவோ, வேறுசிலர் சமூகமாகவோ இணைந்து இச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.

திறவெளிக் கருத்தரங்கம் என்பது புதிய பரிசோதனை முயற்சியா?

தொழில்நுட்பத் துறைகளில் இதுபோன்ற கருத்தரங்குகள் புதிதானவையல்ல. ஆனால்
பிறதுறைகளில் இது ஒரு புதிய பரிசோதனை முயற்சியே.

திறவெளிக் கருத்தரங்கம் இலட்சியவாதமாகத் தெரிகிறதே! இது நடைமுறைச் சாத்தியமானதா?
திறவெளிக் கருத்தரங்கங்கள் இலட்சியவாதமாகத் தோன்றினாலும் அவைகள் அதே நேரத்தில் நடைமுறையிலும் சாத்தியமானவை. எங்களுக்குத் தெரிந்தவரை, இதுவரையில் நடைபெற்றுள்ள திறவெளிக் கருத்தரங்குகளில் ஒன்றுகூட தோல்வியடைந்ததில்லை. இக்கருத்தரங்குகளின் பங்கேற்பாளர்கள் ஒரு மாறுபட்ட உலகில் தற்காலிகமாக வாழ்ந்த அனுபவத்தைக் கொண்டு தங்களின் கனவு உலகத்தை பிறருடன் கைகோர்த்து உருவாக்குவதில் அதிக முனைப்புடன் செயல்படத் தயாராகிறார்கள்.

நிகழ்ச்சி நிரல் இல்லாத கருத்தரங்கம் எப்படி இருக்கும்?
இந்தக் கருத்தரங்குக்கு முன்பே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லையே தவிர ஒரு பேசுபொருள் உள்ளது. பேசுபொருளைச் சார்ந்து அனுபவமுள்ள பங்கேற்பாளர்கள் தங்களுக்கான அமர்வுகளை தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். முதலில் பங்கேற்பாளர்களின் சுய அறிமுக அமர்வு நிகழும். அதன் பிறகு, ஒதுக்கப்பட்ட கால அளவுகளில் பங்கேற்பாளர்கள், பேசுபொருளுடன் தொடர்புள்ள தலைப்புகளில் ஒன்றில் அமர்வுகளை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் பயிற்சிப் பட்டறையையோ அல்லது கூட்டாக தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் அமர்வையோ ஏற்படுத்திக்கொள்ளலாம். இந்த அமர்வுகள் அனைத்தும் ஒரு ‘அறிக்கைப் பலகை’ யில் விளம்பரப்படுத்தப்படும். ஒரே சமயத்தில் 3 – 4 இடங்களில் அமர்வுகள் நிகழும். பங்கேற்பாளர்கள் அவரவர்களுக்கு எந்தத் தலைப்பில் ஆர்வமுள்ளதோ அந்த அமர்வில் கலந்துகொள்ளலாம். எந்தத் தலைப்பிலும் ஆர்வமில்லை என்றாலும் அமர்வுகளில் கலந்துகொள்ளாத மற்ற பங்கேற்பாளர்களைச் சந்தித்துப் பேசலாம்.

நாங்கள் சிந்தித்துள்ள சில தலைப்புகள் இதோ! இவற்றைத் தவிர இக்கருத்தரங்கத்தின் பேசுபொருளுடன் தொடர்புடைய பிற தலைப்புகளை நீங்களும் பரிந்துரைக்க விரும்புகிறோம்.

சூழலுடன் இயைந்த விவசாயம்
இயற்கை விவசாயம்
பசுமைக் கட்டுமானத் தொழில்நுட்பம்
ஏன் விவசாயம்?
புவிச்சூடேற்றம்.
உலகமயமாதலும், உணவு பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்பும்
சுயவிருப்ப சமூகங்களை உருவாக்குதல் (creating an intentional community)
உள்ளூர் தாவரயினங்கள்
செடி வளர்ப்புப் பண்ணைகள்
பண்ணையில் என்ன பயிர்கள் வளர்ப்பது?
உணவுக்காடு வளர்ப்பு
தன்னார்வத் தொண்டர்களுடன் பணி செய்வது
பண்ணைகளில் கால்நடை பராமரிப்பு
சுயசார்பு மின்சக்தியை உருவாக்கும் வழிகள்
பண்ணைகளில் குழந்தைகள்; அவர்களது கல்வி
பண்ணையிலிருந்து கிடைக்கும் வருமானம்
கழிவு மேலாண்மை – கழிவறைகள், பிளாஸ்டிக் (ஞெகிழி)
அருகாமையிலுள்ள மருத்துவ வசதிகள்
உள்ளூர் மக்களுடன் உறவாடுவதிலுள்ள பிரச்சினைகள் – மொழி, கலாச்சாரம், சாதி.
வேலையாட்களுடனான பிரச்சனைகளைச் சமாளித்தல்
உள்ளூர் அரசியலை சமாளித்தல்
பண்ணை வேலையை மகிழ்ச்சிகரமாக ஆக்கிக் கொள்தல்
மழைநீர் சேகரிப்பு – திறந்தவெளிக் கிணறு, ஆழ்துளைக் கிணறு, குட்டைகள்
என்னிடம் சென்னைக்கு அருகாமையில் நிலம் இருக்கிறது. ஆனால், என்னால் நேரம்
செலவழிக்க இயலவில்லை. அங்கு ஏதேனும் என்னால் அர்த்தபூர்வமாக செய்ய முடியுமா?
விதை வங்கி
ஆன்மிக மற்றும் நீடித்த சமூகங்களை உருவாக்குதல்
பண்ணைகளில் பொருளாதார சுயசார்பு
விவசாய நிலம் மலிவாக உள்ள இடங்கள் (ஏக்கருக்கு மூன்று இலட்சத்திற்கும் கீழ்)
நிலம் வாங்கும்போது செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
எவ்வாறு விளைபொருட்களை லாபத்திற்கு விற்பனை செய்யலாம்?
எப்படி உயிருள்ள வேலி அமைக்கலாம்?
இயற்கை உரங்கள் மற்றும் பூச்சி விரட்டிகள் தயாரித்தல்
சிறிய பண்ணைகளும், அவற்றின் வெற்றிக் கதைகளும்
நகரவாசிகள் கிராமங்களில் குடியேறும்போது சந்திக்கும் சிக்கல்கள்

பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுமா?
ஒரு முழுமையான மதிய உணவு கொடுக்க எங்களுக்கு இயலாது. அதற்கு பதிலாக, பழங்கள் மற்றும் சத்துள்ள சிற்றுண்டிகள் போன்றவற்றை நாள் முழுவதும் கிடைக்கச் செய்வோம். வீட்டிலிருந்து மதிய உணவைக் கட்டிக்கொண்டு வந்தால், நிகழ்விடத்தில் அமர்ந்து உண்ணலாம். அருகாமையிலேயே சில உணவகங்களும் உள்ளன.

பதிவுக் கட்டணம் உள்ளதா?
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதில் எங்களுக்கு பெரிய செலவு ஒன்றும் இல்லை.
நிகழ்விடத்திற்கு கட்டணம் இல்லை. மதிய உணவுக்கான செலவில்லை. ஒலிபெருக்கி ஏதும் வாடகைக்கு எடுக்கவில்லை. ஆனால், சிற்றுண்டி, குடிநீர், எழுதுபொருட்கள், இன்னபிற போன்றவற்றிற்கு ஒரு சிறிய தொகை தேவைப்படும்.. கருத்தரங்கின்போது இவற்றுக்காக நீங்கள் மனமுவந்து ஏதேனும் நன்கொடை அளிக்க முன்வந்தால் ஏற்றுக்கொள்வோம்.

வெளியூரிலிருந்து வரும் பங்கேற்பாளர்களுக்கு தங்க இடம் ஏற்பாடு செய்வீர்களா?

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் எங்கள் குழுவினர் பலரும் நிகழ்விடத்துக்கு
அருகாமையிலேயே இருப்பதால், எங்கள் வீடுகளிலேயே நீங்கள் தங்கிக்கொள்ளலாம்.. உங்களுக்குதங்க இடம் வேண்டும் என்றால் உடனடியாக எங்களுடன் தொடர்பு கொள்ளவும். கிரன்: 0-95001-17031

நான் ஏதாவது கொண்டு வரவேண்டுமா?
இத் திறவெளி கருத்தரங்கின் பேசுபொருளுடன் தொடர்புள்ள எது இருந்தாலும் கொண்டு வாருங்கள். குறிப்பாக புகைப்படங்கள், திரைப்படங்கள், சுவரொட்டிகள், சிற்றேடுகள், குறுந்தட்டுகள், புத்தகங்கள்.. முக்கியமாக உங்களது வாழ்க்கைக் கதைகள், கேள்விகள் மற்றும் பதில்களை பகிர்தலுக்காகக் கொண்டு வாருங்கள். (திரைப்படம் திரையிட வேண்டியிருந்தால் முன்கூட்டியே தெரிவிக்கவும். அதற்கான வசதிகளை ஏற்பாடு
செய்கிறோம்.)

குழந்தைகளை உடன் அழைத்து வரலாமா?
நிச்சயமாக அழைத்து வாருங்கள்! அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு நிறைய
இருக்கிறது. ஆர்வமிருந்தால் அவர்களும் அமர்வுகளில் கலந்துகொள்ளலாம். சிறு
குழந்தைகளுக்கென சில விளையாட்டுகளை ஏற்பாடு செய்திருக்கிறோம். ’ஸ்பேசஸில் ஏறுவதற்கான மரங்கள் உள்ளன; மேலும் இந்நிகழ்விடம் கடற்கரையில் அமைந்துள்ளதால் மாலை வேளைகளில் அங்கு விளையாடலாம்.

வளர்ப்புப் பிராணிகளை அழைத்து வரலாமா?

‘ஆம்!’ என்று சொல்ல நினைத்தாலும், ‘வேண்டாமே!’ என சொல்ல வேண்டியிருக்கிறது! ஏனெனில், நிகழ்விடத்தில் அவற்றை அனுமதிக்க மாட்டார்கள்.